×

புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளார். இதுதொடர்பாக கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, \\”மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்வைக்கக்கூடிய அத்தனை விஷயங்களும் அமலாக்கத்துறையினரால் யூகங்களாகத்தான் சொல்லப்படுகிறது. தவிர அதில் நேரடி சாட்சியங்கள் என்று எதுவும் கிடையாது’என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “ஒரு விஷயத்தில் தவறு நடக்கிறது என்றால் அதற்கு பொறுப்பானவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் கைது செய்வார்கள் என்று கெஜ்ரிவால் நினைத்து இருக்க மாட்டார்” என்று கூறினார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ, ‘‘புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் நடத்தப்பட்ட ஊழல் மற்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏன் இடைக்கால ஜாமீன் வழங்க கூடாது. இது மக்களவை தேர்தல் நேரமாக இருக்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு நிவாரணம் வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்ய உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை எங்களுக்கு பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் ராஜூ, ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால் ஜாமீன் வழங்குவதை எதிர்ப்பேன்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதி காலை 10.30மணிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

The post புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Supreme Court ,New Delhi ,Delhi ,Chief Minister ,Aam Aadmi Party ,Tihar Jail.… ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!